மாணாக்கர் மாண்பு
கல்வி என்பது அறிவைத் தேடுகின்ற முயற்சி. கற்றல் என்றால் தோண்டுதல். நிலைத்தைத் தோண்டினால் நீர் எவ்வாறு ஊற்று எடுக்கிறதோ அதேபோல உங்கள் அறிவுச் சுரங்கத்தைத் தோண்டினால் அறிவுச் செல்வம் கிடைக்கும்.
- கல்வி ஒரு தேடல்.
- கல்வி நமது அறிவாற்றலை உயர்த்த உதவும் கருவி.
- கற்கும் திறனை உயர்த்திக்கொள்.
- நினைவாற்றலை, சிந்தனை ஆற்றலை உயர்த்திக்கொள்.
- எல்லாத் திறமைகளையும் உயர்த்திக்கொள்ள கல்வியே உறுதுணையாக இருக்கும்.
- சுவரில்லாமல் சித்திரமில்லை என்பார்கள். உடலை வளர்த்தேன் உயிர் வளார்த்தேன் என்றார் திருமூலர்.
- மூளை வளர்ச்சியின் முக்கியத்தேவை நல்ல மனநிலை.
- மதிப்பெண்கள் பெற்றவருக்கு மட்டுமே அதிக வாய்ப்புகள் உண்டு.
- மதிப்பெண் பெற எல்லா பாடங்களையும் படிக்க வேண்டும்.
- எல்லா வினாக்களுக்கும் முழுமையாக புத்தகத்தில் உள்ளபடி விடை எழுத வேண்டும்.
- இதற்கு பயிற்சி முயற்சி தொடர்ச்சி தேவை.
- வெற்றியின் பயணத்தில் விழிப்போடு செயல்படுங்கள்.
- எதையும் மன உறுதியை இழந்து விடாதீர்கள்.
- திட்டமிட்டு உழைக்கும்போது திசைகள் தோறும் வெற்றி.
- செயல்முறை செம்மையானால் செயல்கள் யாவும் வெற்றியாகும்.