உயிர்மை


பங்கு: கூட்டொருங்கியக்கத் திருஅவையின் உயிரணு நுால் வெளியீடு அறிமுக உரை
கூட்டொருங்கியக்கத் திரு அவை என்பது இணைந்து பயணிக்கும் திரு அவை. இப் பயணம் நிறை வாழ்வை நோக்கிய தோழமை, அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நிறைந்த திருப்பயணம். ஒற்றுமையுடனும் பங்கேற்புடனும் நற்செய்தி அறிவிப்புடனும் இணைந்து பயணிக்கும் பயணம். இதில் குழுமம், குடும்பம் என்னும் எண்ணம் மேலோங்கி நிற்கின்றன. மேலும் நம்பிக்கை, எதிர்நோக்கு, மற்றும் அன்பு விரவிக் கிடக்கின்றன.
ஐக்கியம், ஒன்றிப்பு இவற்றின் ஊற்றாகிய நற்கருணை இறையாட்சியை நோக்கிய பயணத்தில் அவர்களுக்கு தொடர்ந்து ஊட்டம் அளிக்கிறது. 1கொரி 10: 1-17; திஅ எண் 7, 1கொரி 12:27, தூய ஆவியாரின் கோவிலாக திரு அவை உள்ளது. (திஅ 17). கூட்டொருங்கியக்கம் என்பது மனித குலம் அனைத்தோடும் இணைந்து, கிறித்தவர்கள் கிறிஸ்துவோடும்இறையாட்சி நோக்கியும் நடப்பதும் ஆகும்.
பங்கு என்பது இறைமக்கள் சமூகம். தனித் திரு அவையில் நிலையான முறையில் நிறுவப்படுள்ள கிறிஸ்தவ விசுவாசிகளின் ஒரு குறிப்பிட்ட சமூகமாகும் (தி.ச. 515§1). இந்த இறைச் சமூகம் செபிக்கும் சமூகமாக, அருளடையாளச் சமூகமாக, உறவுச் சமூகமாக, பகிரும் சமூகமாக, சமத்துவ சமூகமாக வளர்ந்து இயேசுவின் விழுமியங்களுக்குச் சான்று பகர்தல் இன்றைய காலத்தின் கட்டாயம். திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவில் ஒருடலாக இணைக்கப்பட்டவர்கள் என்பதால், இறைமக்களாக உருவாக்கப்பட்டுள்ளவர்கள் கிறிஸ்துவின் நம்பிக்கையாளர்கள் ஆவர்.
பங்கு என்பது கூட்டொருங்கியக்கத் திரு அவையின் ஒரு அணு. “ஒரு அணுவாக திரு அவை” என்பது கிறிஸ்துவின் உடலின் ஒரு சிறிய, உயிருள்ள கலமாகும். அங்கு கரு பல்வேறு சுற்றுப்பாதைகளை ஒற்றுமையின் பிணைப்புகள் மூலம் ஒன்றாக இணைத்து, உலகிற்கு மறைத்தூது ஆற்றலை வெளியிடுகிறது. இந்த கட்டமைப்பு மூன்று முக்கிய செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது செவிமடுத்தல், இறைவேண்டல், நற்செய்தி அறிவிப்பு இதனால் ஒவ்வொரு திரு அவை உறுப்பினரும் வழியில் ஒரு சீடராக மாறுகிறார் (காண். தி.ப 2:42-47 மத் 28:19-20 EG 24, 28)
உயிர்மை எனும் நூல் 10 இயல்களைக் கொண்டுள்ளது. உயிர்மை எனும் தப்ைபு 3 கருக்துக்களைக் கொண்டுள்ளது. தமிழில் உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் இணைந்து உயிர்மெய் எழுத்தை உருவாக்குகின்றன. உயிரும் உடலும் இணைந்து மனிதனை உருவாக்குகின்றன. தூய ஆவியாரும் திரு அவையும் இணைந்து கூட்டொருங்கியக்கத் திரு அவையை உருவாக்குகின்றன என்று சொன்னால் மிகையாகாது.
இவ்வாறு கூட்டொருங்கியக்கப் பங்கின் இதயமாக, இணைந்து பயணிக்கும் பங்காக, பயணத்தில் தவறும் போது மனமாறும் சமூகமாக, ஆவியின் வழி நடத்தலில் பயணிக்கும் திருகூட்டமாக, அனுப்பப்பட்ட எதிர் நோக்கின் அணுவாக பங்கு விளங்க வேண்டும் என்பதை இந் நூலின் ஆசிரியர் முனைவர் அ. ஜோசப் லுார்து ராஜா அவர்கள் ‘உயிர்மை’ எனும் அவரது 23-ஆம் நூலில் எழுதி 10 இயல்களாக வடிவமைத்துள்ளது பாரட்டுக்குரியது. இதில் 16-ஆம் உலக ஆயர் மாமன்றம் கூடி சிந்தித்த முதல், இரண்டு மற்றும் மூன்றாம் அமர்வுகளின் அறிக்கையின் மையக் கருத்துகள் இடம் பெற்று உள்ளன என்பது சிறப்புக்குரியது.
முனைவர் அ. ஜோசப் லுார்து ராஜா அவர்கள் சிவகங்கை மறைமவாட்டத்தை சார்ந்தவர். தமிழ் இலக்கியக் கழகத்தின் மேனாள் இயக்குநர். தனிறாயகம் அடிகள் இதழியல் கல்லூவியின் மேனாள் முதல்வர் மற்றும் செயலாராக பணியாற்றியவர். உரோமையிலுள்ள கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் சமூகத் தொடர்பு ஊடகக் கல்வியில் முதுகலைப் பட்டமும் மறைத்துாது இயலில் முனைவர் பட்டமும் பெற்றவர். சிவகங்கை மறைமாவட்டத்தில பல ஆண்டுகள் பணியாற்றிவர். பன்முகத் திறமை கொண்டவர். இவர் எழுதிய 23-ஆம் நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறது.
இப் பெருமைமிக்க நாலினை வெளிட சென்னை மயிலைப் பேராயரும் தமிழக ஆயர் பேரவையின் தலைவருமான மேமிகுப் பேராயர் ஜார்ஜ் அந்தோனிச் சாமி அவர்களை தமிழ் இலக்கியத்தின் பெயராலும் அதன் தவைரும் கோட்டார் மேனாள் ஆயருமான மேமிகு ரெமிஜியுஸ் அவர்கள் பெயராலும் அன்புடன் அழைக்கின்றேன். மேலும் இதன் முதல் படியை மதுரை உயர் மறைமாவட்டப் பேராயரும் இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் திருஅவைச் சட்ட பணிக் குழுவின் தலைவருமான மேமிகு அந்தோனிச்சாமி சவரிமுத்து அவர்களும், சிவகங்கை மறை மாவட்ட ஆயரும் தமிழகக் கத்தோலிக்க வார இதழான நம் வாழ்வுச் சங்கத்தின் தலைவருமான மேமிகு லூர்து ஆனந்தம் அவர்களும், கோட்டாறு மறை மாவட்ட ஆயரும் தமிழக ஆயர் பேரவையின் செயலருமான மேமிகு நசரேன் சூசை அவர்களும் பெற்றுக் கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றேன்.
Joseph Lourd