இலக்கணமாகும் இலக்கு
காலத்தின் அறிகுறிகளுக்கேற்ப பெண்; துறவிகளின் வாழ்விலும் பணியிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.சுயசுத்திகரிப்பிலிருந்து சமுதாயப் பணிக்குச் செல்லும் ஒரு பரிணாம வளர்ச்சியைக் காண முடிகிறது.
வார்த்தைப்பாடுகளையும் குழும வாழ்வையும் இறையாட்சிப்பணியை துரிதப்படுத்தும் துணை சாதனங்களாக கொண்டுஇ மக்கள் மத்தியில் மக்களோடு வாழ்வதைக் காலத்தின் கட்டாயமாகக் கருதி செயல்படுகின்றனர். நீதிமைய இறைவாக்கினர்களாக எதிர்க்கப்படும் அறிகுறியாக இருந்தாலொழியஇ புதிய சமுதாயத்தைப் படைக்கவோ இறையாட்சியைக் கட்டி எழுப்பவோ முடியாது.
எனவே துறவிகள் முதன்மைப்படுத்த வேண்டியபணி சமுகசெயல்பாட்டுப் பணி.இதைத்தான் இ.உ.தி.எண் 43 “சமுதாயக்கடமைகளையும் ஈடுபாட்டையும் புறக்கணிப்பது கிறஸ்தவ வாழ்வின் உண்மையான அர்த்தத்தையே இழப்பதாகும்.இவ்வுலகக் கடமைகளைப் புறக்கணிக்கும் ஒரு கிறிஸ்தவன் தன் அயலானுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஏன்;இ இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைப் புறக்கணிக்கிறான்.” என்று கூறுகிறது.
இன்றைய இளம் துறவிகள் இறைப்பற்றோடு சமுதாயப்பற்றும் கொண்டவர்கள்.வலுவற்ற ஏழை மக்களுடன் தோழமை கொண்டு மனிதமாண்புடன் வாழ ஏங்கும் ஒடுக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகத் தங்களை இழக்கவும் தயாராக உள்ளனர்.
இந்நூல்
சீரிய சிந்தனையாளர்களின் செய்தித் தொகுப்பல்ல
சிறிய சகோதரிகளின் செயல்பாட்டுத் தொகுப்பு.
உயர்வான எண்ணங்களை அல்ல
உண்மையான பணிஅனுபவங்களைக் கொண்டது.
அசாத்தியமான அறிவுரைகளைக் கொண்டதல்ல
சாத்தியமாகும் சில இலட்சியங்களைக் கொண்டது.
‘தான்’ உதிர்ந்து ‘அவரை’ உதிக்கச் செய்து
தூய ஆவியாரின் துணையோடு அன்பின் ஆழம் அறிந்து
நற்செய்தியின் தொண்டராய் எளிய பணியாளராய்
இறைவார்த்தை ஒளியில் இளையோர்க்கு வழிகாட்டி
நலம் தரும் கருவியாய் நலிந்தோரைக் குணப்படுத்தி
உண்மை ஒளியாம் இயேசுவின் அன்புக்குரியவராய்
நற்செய்தியின் சாட்சியாக வாழ வழிகாட்டுகிறது.
கட்டுரைகளைத் தொகுத்து ‘இலக்கணமாகும் இலக்கு’ என்ற நூலை உருவாக்கிய பேரருள் முனைவர் அ.ஜோசப் லூர்து ராஜா அவர்களை
மனமாரப் பாராட்டி அளிக்கிறேன்.