அதிர்வுகள்
(கலை வழி நற்செய்தி)
“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர் … அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அருளடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்” (மாற் 16:15-20; மத் 28:16-20; லூக் 24:36-49; யோவா 20:19-23; திப 1:6-8). ஆண்டவராகிய இயேசு மீட்பர் என்பதை சீடர்கள் தாங்கள் கண்டதையம் கேட்டதையும் தொட்டு உணர்ந்ததையும் அறிவித்தார்கள்; எழுதினார்கள்; சான்று பகர்ந்தார்கள். இச்சீடர்கள் தாக்கமிகு தொடர்பாளர்கள் ஆனார்கள். காரணம் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நற்செய்தி என்பது என்ன? நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்தார்கள். எனவேதான் நற்செய்திப் பணிக்கு சாட்சிகளாக, எடுத்துக்காட்டுகளாக, முன்மாதிரிகைகளாக விளங்கினார்கள். அதேபோல ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஆற்ற வேண்டிய பணி நற்செய்திப் பணி ஆகும். ஏனெனில் இப்பணி செய்யும் கடமை திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரிடத்திலும் இயல்பிலேயே இருக்க வேண்டியது.
நற்செய்திப் பணியின் மையப் பொருள் இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. ஆனால் பணியின் வழிமுறைகள், உத்திகள் பண்பாட்டுக்;குத் தக்கவாறு மாறுபடலாம். எனவே நமது தமிழக, இந்தியச் சூழலில் நற்செய்திப் பணி எவ்வாறு செய்ய முடியும் என்று சிந்தித்ததின் விளைவே இந்நூலின் நோக்கம். 28 ஆண்டுகால குருத்துவப் பணியை சீர்தூக்கிப் பார்க்கும்போது நற்செய்திப் பணி ஆற்றுவது பல முறைகளில், பல வழிகளில் இருந்தாலும் கலை வழியில் நற்செய்திப் பணி புரிவது தாக்கமிகு பணியாகும்.
இப்பின்னணியில் இந்நூல் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு முதல் பாகத்தில் நற்செய்தியின் பொருள் நற்செய்திப் பணி என்பதன் விளக்கம், திருச்சபை வரலாற்றில் நற்செய்திப் பணிக்குக் கொடுத்த அழுத்தங்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் நற்செய்திப் பணி ஆற்றுவதற்குரிய உத்திகளாகிய சமூகத் தொடர்பு ஊடகங்கள், மாற்று ஊடகங்கள் பற்றி மிகத் தெளிவாக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மெக்லூகன் என்ற தொடர்பியல் வல்லுநர் கூறுவார் “ஆநனரைஅ in வாந அநளளயபந” அதாவது ஊடகமே செய்தியாக மாற வேண்டும். அனுப்புநருக்கும் ஊடகத்துச் செய்திக்கும் பெறுநருக்கும் உள்ள இடைவெளி குறைக்கப்பட வேண்டும். இயேசுவின் இறையாட்சிப் பணியில் நற்செய்தி போதிப்பவரும் நற்செய்தியும் நற்செய்தியின் கருப்பொருளும் இயேசுவே என்பதை பவுலடியார் தான் எழுதிய திருமுகங்களில் விளக்கியுள்ளார். நற்செய்திப் பணி ஆற்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த நூலாக அமைய வேண்;டும் என்ற நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.