மாணாக்கர் மாண்புற வாழ்வியல் வழிமுறைகள்
மாணாக்கர் அறிவியல், கணிதம், மொழி, மற்றும் சமூக அறிவு ஆகியவற்றின் மூலம் அனைத்துத் துறைகளிலும் திறன்களை உருவாக்குகிறது கல்வி, திறன்களை வளர்க்கும் நிலைத்தன்மை கொண்டது கல்வி. மாணாக்கருக்கு வெறும் அறிவை மட்டுமல்ல, ஒழுக்கம், பண்பாடு மற்றும் அன்பைக் கற்றுக்கொடுக்கிறது கல்வி.
கல்வி கற்பிக்கும் திறன் கொண்டது என்பதோடு மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்கும் நிறை வாழ்வின் வழியை அறிக்கையிடும் பொறுப்பையும் இவ்வாழ்வின் முழுமையை அவர்கள் அடைய முயலும் வண்ணம் இடையறாத அக்கறையோடு அவர்களுக்கு உதவிடும் பொறுப்பையும் கொண்டிருக்கிறது (காண்: Vat:ll கிறிஸ்தவக் கல்வி எண்.3). இவ்வாறு வாழும் மாணாக்கர் அவருடைய சமூகத்திற்கு உதபுவராகவும், மனித உரிமைகளை மதிப்பவராகவும், கடவுளின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்பவராகவும் மாறுவார். நல்ல கல்வி, தன்னால் மற்றவர்கள் நலமுடன் வாழ உதவுகிறது. பிறரின் நலனுக்காகப் பாடுபடும்போது, மரியாதையும், உலகிலுள்ள உண்மையான கௌரவத்தையும் அவர் பெறுகிறார். இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நூலாக வெளிவருகிறது ‘மாணக்கர் மாண்புற வாழ்வியல்’ எனும் நூல்.
இந்நூல் ஒன்பது இயல்களைக் கொண்ட நவ இரத்தின கருவூலமாக உள்ளது. அவை பின்வருவனவாகும்.
- மாணாக்கர் சந்திக்கும் சமூகம், பொருளாதாரம், கல்வி, குடும்பம், மற்றும் மன அழுத்த சவால்கள்,
- சவால்களைச் சந்திப்பதற்குள்ள வழிமுறைகள்.
- கல்வியில் வெற்றிக்கு அடிப்படை சூத்திரங்கள்.
- கற்றல் திறனை மேம்படுத்த சில பயிற்சிகள், முறைகள் மற்றும் உதாரணங்கள்,
- மாணாக்கரில் ஊடகத்தாக்கங்களும் அவற்றிலிருந்து விடுதலை பெற காணப்பட வழிமுறைகள்,
- மாணாக்கர் மாண்புற வாழ்வியல் வழிமுறைகள்.
- மாணாக்கருக்கும் ஆசிரியருக்கும் அறிவுத்திறன் மேம்பாட்டில் பங்கு.
- மாணாக்கருக்கிடையே உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள்,
- மாணாக்கரில் உதயமான தலைவர்கள்.
இந்த நுால் மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற மட்டுமன்றி ஒரு நோக்கத்தோடும். மரியாதையுடனும், நேர்மை மற்றும் பண்புகளுடன் வாழ்வதற்கான அவசியமான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. ஆசிரியர். மாணவர் வாழ்க்கையைப் பற்றிய அவரது ஆழமான புரிதலோடு. ஒரு மாணவரின் வளர்ச்சிக்கு பயனுள்ள முக்கியமான அம்சங்களை விளக்குகிறார். அது அறிவாற்றலின் அடிப்படையில் மட்டும் இல்லாமல், பண்பாட்டிலும், குணத்திலும் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.