நங்கூரம் – நம்பிக்கையில் மிளிரும் வாழ்வியல்
நம்பிக்கையில் மிளிரும் வாழ்வியல் உறவின் உயிர் மூச்சு நம்பிக்கை. வாழ்க்கையின் அடிநாதம் நம்பிக்கை. சாதனைகளின் பிறப்பிடம் நம்பிக்கை. நம்பிக்கையோடு பயணிக்கும்போது சுமையான, சோகமான, சவால்கள் நிறைந்த பயணங்களும் மகிழ்ச்சிமிகு பயணங்களாக மாறும் என்பதில் ஜயமில்லை. வாழ்வு பயணத்தில் இறைவனை, பிறரை, தன்னை, நம்பி பயணிக்கும் பயணம் சுகமான பயணம்;. மனிதரின் பயணத்தை மூன்று வகையாக பிரித்துப் பார்க்கலாம். ஒன்று (1) இறை நோக்கு பயணம் மற்றொன்று (2) பிறர் நோக்கு பயணம் பிரிதொன்று (3) அக நோக்கு பயணம். இம் மூன்று வகையான பயணத்திலும் இழையோடி இருப்பது நம்பிக்கை.
ஒரு நிகழ்வை அல்லது ஒரு வார்த்தையை அல்லது ஒரு பொருளை பல கண்ணோட்டத்தில் காணலாம். நம்பிக்கையை விவிலிய, இறையியல் நோக்கில் காணும்பொழுது, நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி 11:1-2). ஆகும். கடவுளின் கொடை என்பர் சிலர். திருச்சபையின் கோட்பாட்டு உண்மைகளை ஏற்றுக்கொள்வது பகுத்தறிவுக்கு எட்டாத உண்மைகளை அவரே வெளிப்படுத்தியுள்ளதால் நாம் ஏற்றுக்கொள்ளும் அறிவு என்பர் இன்னும் சிலர்.
நம்பிக்கை என்பது வாழ்வளிக்கும் அன்பாக தன்னையே முழுமையாக அர்ப்பணிக்கும் நிலையே நம்பிக்கை என்பர் சிலர். முதலில் இறைவன் என்னும் ஆளை நம்புவது என்பர் சிலர். நம்பிக்கை என்பது அவருடைய பணியில் அவருடன் நம்மையே இணைத்துக் கொள்ளும் என்பர் சிலர். அனைத்து கூற்றுகளையும் இணைத்து, ஆராய்ந்து பார்க்கின்றபோது இயேசுவை அறிந்து அன்பு செய்து அவருடன் இணைந்து இறையாட்சிப் பணியில் ஈடுபடுவதே நம்பிக்கை (இ.உ.தி எண் 43). எனவே நம்பிக்கைக்கான விளக்கத்தை எளிதாக, வேகமாக விளக்கிவிட முடியாது. இருந்தபோதிலும் நம்பிக்கைக்கான பொருள்களை ஒருசில கோணங்களில் ஆராய்ந்து பார்ப்பதும் நம்பிக்கையின் வகைகளைக் காண நம்பிக்கையின் ஆற்றல்களை உணர்ந்து பார்க்க “நங்கூரம்: நம்பிக்கையில் மிளிரும் வாழ்வியல்”; என்ற நூலை எழுதியுள்ளார் சிவங்கை மறைமாவட்ட முதன்மைக் குரு பேரருள்முனைவர். அ. ஜோசப் லூர்து ராஜா. இந் நூல் இவரது 16-வது நூல் என்பது குறித்து மகிழ்ச்சி.
மேனாள் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் கூறுகிறார், “நம்பிக்கை என்பது ஆண்டவரோடு நிற்கவும், அவரோடு வாழவும் நாம் எடுக்கும் நிலைப்பாடாக ஆகும். நம்புவது சுதந்திரமாக செயல்படுத்தப்படும் செயல் என்பதால் இது நம்புபவரிடமிருந்து சமூக பொறுப்பையும் எதிர்பார்க்கின்றது.(Pழசவய குனைநi – நம்பிக்கையின் வாயில் மடல்) பெந்தகோஸ்தே நாளில் திருஅவை தான் நம்புவதின் வெளியரங்க தன்மையையும் (Pரடிடiஉ னiஅநளெழைளெ) அதை எல்லாரிடமும் அச்சமின்றி அறிக்கையிடுவதன் அவசியத்தையும் தௌ;ளத் தெளிவாக நிகழ்த்திக் காட்டியது என்று திருத்தந்தை விளக்குகிறார். எனவே நம்புவது என்பது தனிநபர் சம்மந்தப்பட்ட செயல் (Pசiஎயவந யஉவ) என்று நினைக்கக் கூடாது. மாறாக குழுமம் சார்ந்ததுமான ஒரு செயல்பாடு என்று வலியுறுத்துகிறார்.
இந்நூலானது நம்பிக்கைக்கான விளக்கம், நம்பிக்கையின் வகைகள், நம்பிக்கை வாழ்வின் முன்மாதிரிகைகள், நலமுடன் வாழ வழிவகுக்கும் வழிமுறைகள், நம்பிக்கை வாழ்வில் வரும் சோதனைகள், சவால்கள், தடைகள் ஆகியவற்றையும் தடைகளை நீக்குவதற்கான வழிமுறைகளையும் தேட முயற்சித்துள்ளார். இயேசுவை நம்புவோர் கைவிடப் படுவதில்லை என்பதைப் பல்வேறு சான்றுகளுடன் விளக்கியுளளார்.