இளைஞரின் இலக்கணம் இயேசு
தமிழக திருஅவை 2020-ஆம் ஆண்டை இளைஞர் ஆண்டாக சிறப்பிக்க இருக்கிறது. இளைஞர்கள் வாழ்வு முறை, இளைஞரின் வளங்கள், எண்ணங்கள், தொலை நோக்கு, செயல்பாடுகள் ஆகியவற்றைச் சிந்தித்து, அவர்களை சீரிய நேரிய பாதையில் வழி நடத்திச் செல்வது திருஅவையில் பொறுப்பில் இருக்கக்கூடியவர்களின் கடமையாக உள்ளது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் இளைஞர்களைப் பற்றிச் சொல்லும் போது ‘நாளைய சமூகத்திற்கு உருக்கொடுக்க இருப்பவர்கள்’; என்று குறிப்பிடுகிறது. அதேவேளையில், அனைத்தையும் திறந்த கண்கொண்டு நோக்குங்கள்; உங்கள் சகோதரர் சகோதரிகளின் கோரிக்கைகளுக்குச் செவிமடுங்கள்;. இளமை துள்ளும் உங்கள் ஆற்றலை அவர்களது பணியிலே செலவிடுங்கள். தன்னலத்தை வளர்க்கும் எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடுங்கள். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் 1985-ஆம் ஆண்டில் முதல் அகில உலக கத்தோலிக்க இளைஞர் இயக்க மாநாட்டைக் கூட்டி அவர்களுக்கு உரையாற்றிய போது, இளைஞர்களைப் பார்த்துச் சொன்னார், ‘நீங்களே என் நம்பிக்கை, திருச்சபையின் எதிர்காலம்‘ என்று இளைஞர்களை திருச்சபையின் வளர்ச்சியில் பங்கேற்க அழைத்தார்;.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளைஞர்கள் மீது அளவில்லா பற்றும் நேசமும் கொண்டிருப்பதினாலே, ‘கிறிஸ்து வாழ்கிறார்‘ – ‘Christus Vivit‘ என்ற இளைஞர் சார் திருத் தூதுரையை எழுதியுள்ளார். அதில் ஒன்பது பிரிவுகளும் 299 பத்திகளும் உள்ளன. இளைஞர் சார் திருத்தூதுரையை ஆழமாக வாசித்து தியானித்து இரத்தின சுருக்கமாகவும் அதோடு சேர்த்து தன் கருத்துக்களையும் இளைஞரோடு பணியாற்றிய அனுபவங்களையும் சேர்த்து தொகுத்து பகுத்து செப்பனிட்டு ‘இளைஞரின் இலக்கணம் இயேசு‘ என்ற தலைப்பில் இளைஞருக்கான நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் இயேசுவின் தலைமையில் இளைஞர்கள், இளைஞர்களை ஆற்றல்படுத்தல் இளைஞர்களின் ஆன்மீக, ;இளைஞர்களை ஆற்றல்படுத்தும் வழிமுறைகள், இளைஞர்களின் வளங்கள் இறையாட்சிக்காய் இளைஞர்கள் ஆகிய தலைப்புகளில் இளைஞர்களின் வாழ்வுமுறை பற்றி தெளிவாக விவிலியப் பின்னணியிலும் சமூவியல் கண்ணோக்கிலும் இறையியல் பார்வையிலும் விளக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் நேசித்து வாசித்து யோசித்து சுவாசிக்கச’ செய்ய அன்புடன் அழைக்கின்றேன். இந் நூலின் விலை Rs. 150/- இது எனது 15 ஆவது நூல்.