பங்கு ஓர் இறையாட்சிச் சமூகம்


இறையாட்சிச் சமூகம்… தளிர்த்து வளர்ந்திட…

சமத்துவ, சகோதரத்துவ, சமாதான சமூகம் என் பங்குப் பணியின் இல்ககு. இத்தகைய சமூகம் சமைக்க முனைவதும் அதற்குரிய வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் உருவாக்குவதும் என் கடமைகள். அன்று நான் கனவு கண்ட சமூகம் இன்று ‘இறையாட்சி சமூகம்’ என்னும் நூலை எழுத என்னை உந்தித் தள்ளியுள்ளது.

இத்தகைய பின்புலத்தில் பங்கு எனபது ஓர் இறையாட்சி சமூகம் அதுவும் ஒரு குட்டி இறையாட்சிச் சமூகம். இச் சமூகத்தில் வாழும் பங்குப்பணியாளர் யார்? அவருடைய வாழ்வும் பணிகளும் எந்நிலையில் இயங்க வேண்டும்? அவருடைய ஆன்மீகம் எத்தகைய ஆன்மீகமாக இருக்க வேண்டும்? இச் சமூகத்தின் உயிர் அணுவாக விளங்கும் குடும்பங்கள் எப்படி வாழ வேண்டும்? பங்குப் பணியாளர் வாழ்வு முறைகள் யாவை? அவர் இயக்குகின்ற பங்கேற்பு அமைப்புகள் அல்லது அமைப்புகள் இயக்கும் இயக்கங்கள் யாவை? இறையாட்சி சமூகத்தில் இயங்கும் பணிக்குழுக்கள் அவற்றின் நோக்கங்கள் வழிமுறைகள், அருள்பணித் திட்டங்கள் இறுதியில் அருள்பணி ஆய்வு நடைபெற செய்ய வேண்டிய முன் தயாரிப்புகள் யாவை? போன்ற வினாக்களுக்கு விடை காண முயற்சிப்பது இந்நூலின் நோக்கம்.

இறையாட்சிச் சமூகம் என்பது விரிந்து பரந்து அகன்ற ஆழமான அளவிடமுடியாத பரந்த ஒன்று. இதைப் விரிந்த பார்வையில்; (MACRO) அளவில் பார்க்கின்றபோது ஒரு மறைமாவட்டமாகவோ அல்லது உலக திருஅவையாக அமையும். அதையே சிறிய பார்வையில்; (MICRO) அளவில் பார்க்கின்றபோது அது இன்றைய கால சொல் வழக்கில் பங்காக அமையும். இந்நூலில் நாம் சிந்திக்கப் போவது சிறிய அளவில் (MICRO) உள்ள ‘பங்கு’ பற்றிய பார்வையும் தொகுப்பும் ஆகும்.

இறையாட்சிச் சமுகம் என்பது அனைத்து இன, மொழி, மத, பண்பாடு மக்களையும் ஒருங்கிணைத்த சமூகம். இதில் ஏற்றத்தாழ்வுக்கோ, இன, மொழி, மத, பண்பாட்டு வெறிகளுக்கோ இடமில்லை. இறையாட்சிச் சமுகம் கடவுள் மையக் கொள்கையோ, வார்த்தை மையக் கொள்கையோ, மனித மையக் கொள்கையோ, நிறுவன மையக் கொள்கையோ, உலக மையக் கொள்கையோ கொண்டது அல்ல. மாறாக இறையாட்சி மையக் கொள்கை கொண்டது. இது அனைவரையும் தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும் (INCLUSIVE) சமூகம். யாரையும் ஒதுக்கித் தள்ளாத(நுஒஉடரளiஎந) சமூகம்.

இறையாட்சி சமூகத்தை இவ் உலகில் படைப்பது அல்லது வென்றெடுப்பது என்பது சால்கள் நிறைந்த மாபெரும் உண்ணதமான, மகத்தான, சீரான, செழுமையான, வளமையான மற்றும் கடினமான பணி;. இத்தகையப் பணியை அருள் பணியாளர்கள் ஆற்றும் போது ஆண்டவரின் அருள் இன்றி செய்வது இயலாது. ஆண்டவரின் அருளோடு அவணியல் இந்த இறையாட்சி சமூகம் படைப்பதற்கு உதவும் மனநிலைகள், பழக்க வழக்கங்கள், செயல்பாடுகள் பற்றி விளக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியே இந் நூல்.